ஒரு நாள் காதலர் தினம்!


அடங்க மறுக்கும்
இதயத்தில் அலை கடலென
காதல்!

சொல்ல துடிக்கும்
சமயத்தில் தடையென வரும்
தயக்கம்!

நீ விட்டொழிந்து
போனாலே
கண்ணில் நீர் கொட்டுமடி
தன்னாலே!

அவள் பச்சரிசி
பல்லாலே
முத்தப் பந்தி வைத்துப்
போனாளே!

தனிமையில் ஒரு
குயில்
கவலையில் அதன்
உயிர்!

பாரங்கள் சுமந்து
கொண்டு
பாடல்கள் படிக்குது
இன்று!

சொல்லி விட்ட
காதலுக்கு
ஒரு நாள் காதலர் தினம்!

சொல்லாத எங்களுக்கு
ஒவ்வொரு நாளும்
காதலர் தினம்!


Previous
Next Post »