மழையில் தத்தளித்தான்
அரசை திட்டித் தீர்த்தான்
மழை ஓய்ந்தது
'பீப்' ஒலித்தது!
என்னடா நீங்க
இன்னும்மா திருந்தலை
மாற்றம் வேண்டி
இளைஞர்கள் ஒருபுறம்!
ஒன்னும் இல்லாத
விஷயத்திற்கு
ஒப்பாரி மறுபுறம்!
ஆம்! பெண்களை
இழிவுபடுத்தி
காசு பார்ப்பது
காலம் காலமாய் நடப்பது தானே!
அப்போது எல்லாம்
எங்கே போனீர்கள்
இப்போது மட்டும்
எதற்காக வந்தீர்கள்!
அப்போதெல்லாம்
ஊடகம் கிடையாதே
ஊதிப் பெரிதாக்க!
இப்போது எல்லோருக்கும்
விளம்பரம் தேவை
அதற்கு கதவு திறக்குது
ஊடகம்!
எத்தனையோ பிரச்சனை
தமிழகத்தில் - ஆனால்
எல்லோர் கண்களும்
திரைப்படத்தில்!
இந்தியாவில்
கற்பழித்தால் பத்தாயிரம்
பரிசு கொடுக்குது
நீதிமன்றம்!
குடித்து விட்டு
கார் ஓட்டினால் தப்பு
காரை விட்டு ஏத்தினால்
தப்பில்லை!
வருமானத்திற்கு அதிகமான
சொத்து சேர்த்தால் குற்றமில்லை
மக்கள் வரிப் பணத்திற்கு
உரிய கணக்குமில்லை!
இதனை எல்லாம்
கேட்க திராணி இல்லை
கேவலம் ஒரு பாட்டுக்கு
இத்தனை தொல்லை!
கொலை, கொள்ளைக்கு
எல்லாம் விலக்கு!
கலைக்கு மட்டும் வழக்கா?
உங்களிடம் ஒன்றே
ஒன்று கேட்கிறேன்
என்னா 'பீப்' க்கு போராட்டம்!
அரசை திட்டித் தீர்த்தான்
மழை ஓய்ந்தது
'பீப்' ஒலித்தது!
என்னடா நீங்க
இன்னும்மா திருந்தலை
மாற்றம் வேண்டி
இளைஞர்கள் ஒருபுறம்!
ஒன்னும் இல்லாத
விஷயத்திற்கு
ஒப்பாரி மறுபுறம்!
ஆம்! பெண்களை
இழிவுபடுத்தி
காசு பார்ப்பது
காலம் காலமாய் நடப்பது தானே!
அப்போது எல்லாம்
எங்கே போனீர்கள்
இப்போது மட்டும்
எதற்காக வந்தீர்கள்!
அப்போதெல்லாம்
ஊடகம் கிடையாதே
ஊதிப் பெரிதாக்க!
இப்போது எல்லோருக்கும்
விளம்பரம் தேவை
அதற்கு கதவு திறக்குது
ஊடகம்!
எத்தனையோ பிரச்சனை
தமிழகத்தில் - ஆனால்
எல்லோர் கண்களும்
திரைப்படத்தில்!
இந்தியாவில்
கற்பழித்தால் பத்தாயிரம்
பரிசு கொடுக்குது
நீதிமன்றம்!
குடித்து விட்டு
கார் ஓட்டினால் தப்பு
காரை விட்டு ஏத்தினால்
தப்பில்லை!
வருமானத்திற்கு அதிகமான
சொத்து சேர்த்தால் குற்றமில்லை
மக்கள் வரிப் பணத்திற்கு
உரிய கணக்குமில்லை!
இதனை எல்லாம்
கேட்க திராணி இல்லை
கேவலம் ஒரு பாட்டுக்கு
இத்தனை தொல்லை!
கொலை, கொள்ளைக்கு
எல்லாம் விலக்கு!
கலைக்கு மட்டும் வழக்கா?
உங்களிடம் ஒன்றே
ஒன்று கேட்கிறேன்
என்னா 'பீப்' க்கு போராட்டம்!

EmoticonEmoticon