பூ பூத்த மனதிற்குள் பூகம்பம் வந்தது ஏனோ..
அவள் பார்த்த ஓர் நொடியில்
நான் இங்கு நீர் இலை தானோ....
என்னை விட்டு தானாக
உயிர் மட்டும் செல்வது ஏனோ...
பனி மூட்டம் போலிருந்த
எனக்குள்ளே இன்று
போர் வந்து மூண்டது ஏனோ.....
மழை காலம் வரும் வரை
உணவுகளை சேமிக்கும் எறும்பைப் போல
என் மரண காலம் வரும் வரை
உன் நினைவுகளை சேமிக்கிறேன்......
மேகம் இப்போது எந்தன் தலையணை
உன் நினைவே எப்போதும் எனக்கு உறுதுணை
காலம் எனும் பட்டத்தில்
என் காதல் நூல் அறுந்தேன்.
கானல் நீரடி உன் காதல்
எப்படி தணியும் என் தாகம்...
EmoticonEmoticon