வாழ்க 'பண' நாயகம்

ஜனநாயக நாடு இந்தியா
கற்பழிப்புகள்
இங்கே சாதாரணம்

அதற்காக நீதிமன்றம்
தரும் தண்டனை
விடுதலை!

கார் ஏற்றிக் கொன்றால்
கவலை வேண்டாம்
நீதிமன்றம் இருக்கிறது
தண்டனைக்கு அல்ல தப்பிக்க!

ஊழல் செய்தால்
குற்றமில்லை
ஊரில் எவன் ஊழல்
செய்யவில்லை!

கோடி சொத்து
சேர்த்து வைத்து
நாலு மாடி கட்டி விடு

போலீஸ் வரும்
பாதுகாக்க 
கைது எல்லாம் மக்கள்
கண்ணை மறைக்க!

சட்டம் தன்
கடமையைச் செய்யும்
செய்து கொண்டிருக்கிறது
பணம் படைத்த முதலைகளுக்கு!

பத்து ரூபாய்
திருடி விட்டால்
பத்து நாளு ஜெயிலு!

நூறு கோடி
திருடிப் பாரு
தேடி வரும்
பதவி நூறு!  

கண்ணைக்
கட்டிக் கொண்டிருப்பது
நீதி தேவதை மட்டும் அல்ல
நீதிமன்றமும் தான்...! 
Previous
Next Post »