வியாபாரக் கல்வி?



பகல் முழுவதும் பள்ளியில்
ஆட்டுமந்தை கூட்டத்தில் முதல் ஆடு
முதல் இருக்கை மாணவன்

கடைசி இருக்கை மாணவனும்
காத்துக் கொண்டிருக்கிறான்
அறுக்கப்படும் நாளை நோக்கி!

பாடப் புத்தகத்தில் இருப்பதெல்லாம்
மனப் புத்தகத்தில் ஏற்ற அவர்கள்
என்ன இயந்திரங்களா?

அனுபவ பாடம் தராததையா
அச்சடித்த காகிதம் தந்துவிடும்?
வரலாற்றுக்கு பதில்
வாழ்க்கையை படிக்கலாம் அல்லவா?

ஓடி ஆடி விளையாடும் வயதில்
ஒரே இடத்தில் விளையாட்டு
இயற்கை ரசிக்க நேரம் இன்றி
இயந்திர வாழ்க்கை இவர்களுக்கு!

மதிப்பெண் போட்டியில்
மனிதம் தோற்று விடுகிறது
புத்தக புழுக்களாகவே
குழந்தை பருவம் விழுங்கப்படுகிறது

பாடம் சொல்லித் தர
பணம் அள்ளித் தர வேண்டும்?
வியாபாரக் கல்வியில்
விடியல் தோன்றுமா?

பாவம் மாணவர்கள் அவர்களை காக்க
இனி ஒரு விதி வேண்டும்!

 
Previous
Next Post »