ஒவ்வொரு வருடமும் கழிகிறது கட்டவிழ்த்த காளை என
மாடர்ன் உலகத்தில்
எல்லாமே மலிவு தான்!
மழை ரசிக்க முடியவில்லை
பாடல் கேட்க சகிக்கவில்லை
தொலைக்காட்சி நிகழ்ச்சி
அதில் கூட நல்லதொரு
சிந்தனை துளியுமில்லை!
நல்லதொரு கதை படிக்க
நேரம் இல்லை இவர்களுக்கு
அமைதியாக அமர்ந்திருந்தால்
அடக்கம் செய்து விடுவார்கள் இந்நாளில்!
கால ஓட்டத்தில்
காற்றடைத்த பலூன் நாம்
காற்றைப் பிடுங்கினால்
சேரும் இடம் தெரியாது!
மழை, இயற்கை, சிரிப்பு
இதெல்லாம் ரசிக்க
நேரம் இன்றி தவிக்கிறோம்!
மனிதம் மிச்சமிருக்கிறது நம்மிடத்தில்
பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்
நம் தலைமுறைக்கு இட்டுச் செல்ல!
அதுவரையில் பயணிப்போம்
வசந்தகால வேதனையென
நம்மை அழைக்கும் வரும் புத்தாண்டில்!
EmoticonEmoticon