ஆகம விதி!

சாதி, பேதமின்றி
சாஸ்திரங்கள் கற்றுணர்ந்து
கருவறையின் உள்நுழைந்து
புரட்சி ஒன்றை நடத்திக் காட்ட
காத்திருந்த எங்களுக்கு....

பல மாதப் படிப்பும்
விட்டு வந்த தொழிலும்
விலகி நின்ற வீடும்
கண் முன்னே நிற்கிறது...

வந்தது அந்த தீர்ப்பு
ஆகம விதிப்படியே அர்ச்சகர்
நியமனம் வேண்டும் என்று
சொல்லியது நீதிமன்றம்

அண்டை மாநிலத்தில்
இல்லை ஐயா இதுபோல்
ஒரு சண்டையும் - சர்ச்சையும்
கடவுள் விவகாரத்தில்...

இருவருமே இந்துன்னு சொல்றான்
பின்னே எதுக்கையா தடுக்கிறான்
உன் கடவுளை கழுவ இந்து
என்ற சான்று போதாதா?

வேதம் படித்த மற்றவரின்
நிலை என்னப்பா?
ஆகம விதி இருந்தால்
காட்டுங்கள் நண்பர்களே

படித்து விட்டு நாங்களும்
தெரிந்து கொள்கிறோம்...
Previous
Next Post »