மண்ணுக்கு போற உடம்பு இது
அதை மனம் தான்
உணர மறுக்குது
பணம் என்னும்
பைத்தியம் புடிக்குது
அது மனுசன
ஆட்டிப் படைக்குது!
மழை
காற்று எனும் காதலனுடன்
கை கோர்த்த மகிழ்ச்சியில்
மேகம் வடிக்கும் ஆனந்தக் கண்ணீர்...
நான் வளர்த்த
காதல் மரம்
எப்போது தான்
தென்றல் தரும்.
உன்னை பார்த்த
எல்லோருக்கும்
நிச்சயமாய் காதல் வரும்.
வலிக்கிறதே
இதயம் இங்கு
சிரிப்பது ஏன்
இதழ்கள் அங்கு...!
EmoticonEmoticon