போதி மரத்தின் கீழே புத்தனின் நிலை தான்
காதல்!
வானில் பறக்கும் பட்டத்தின்
கையறு நிலை தான்
காதல்!
கிளை விட்டு உதிர்ந்த பூக்களின்
கண்ணீர் துளி தான்
காதல்!
விளையாட்டு வீரனின்
கண்ணில் தெரியும்
வெற்றி வெறி தான்
காதல்!
புல்லின் இதழில் இளைப்பாறும்
மார்கழி மாத பனித்துளி
காதல்!
விரும்பிய ஒன்று விலகிப்
போகையில் வெடித்துச்
சிதறும் இதயம்
காதல்!
உள்ளங்கள் இணைந்து
கட்டிய தேன் கூட்டில்
கல்லென நுழைவது
காதல்!
EmoticonEmoticon