நிலவிலும் உன் முகம்!


நேற்று என் கனவில்
நீயும் உன் நினைவுகளும்.
நீ எங்கோ தூரத்தில்
உன் கால் கொலுசு ஓசை மட்டும்
என் காதோரத்தில் கவிதைகளாய்.

மவுனமான இரவில்
உன் சிரிப்பு என் தூக்கம் கலைக்க.
கண் விழித்து பார்க்கையில்
நிலவு பளிச்சென்று மின்னியது.

அதிலும் உன் முகமா என்ற
குழப்பத்தில் நான்
உன் பெயரை உச்சரித்துக்கொண்டே
உறங்கினேன்.

சொர்க்கமென இருந்தது
நேற்றைய தூக்கம்...

Previous
Next Post »