நெஞ்சுக் குழி விக்குதடி

அழியாத கோலங்களாய்
அவளின் சிரிப்பு
அலை போல அரிக்கிறதே
அவளின் நினைவு
மனதோடு மார்கழி தான்
அவள் சூடான மழை துளி தான்
எந்த தெருவில் நீ நடந்தாலும்
புனித தலம் ஆகுமடி
மறைந்திருந்து எனை பார்க்காதே
நான் காற்றாக கரைந்திடுவேனே
உன் பெயர் சொல்லும் போது
நெஞ்சுக் குழி விக்குதடி
உன் உடன் செல்லும் போது
பாதை அப்படியே நிக்குதடி
Previous
Next Post »