இதுவே வாழ்க்கையாகும் காதலில்!


காதல்
பதின்ம வயதின்
பரிணாம வளர்ச்சி 

கல்லினில் பூக்கள் பூக்கும்
கண்ணீரும் தேனாய் இனிக்கும்
கவலைகள் இன்பம் கொடுக்கும் 
விரல்களில் விண்மீன் மின்னும் 

சூரியன் பனித்துளி ஆகும்
பனித்துளியில் சூரியன் உதிக்கும்
பாதைகள் அருகே தோன்றும்
நடக்கையில் நாட்கள் நீளும்

பூக்களில் அவள் முகம் தெரியும்
விழிகளில் வானவில் தோன்றும்
வியர்வையின் வாசனை பிடிக்கும்
அவளின் விக்கலும் சங்கீதம் ஆகும்

கைபிடிக்க ஏங்கி நிற்பாய்
கனவிலும் கண் விழிப்பாய்
குழந்தை போல் துள்ளிக் குதிப்பாய்
அவள் நினைவாலே தூக்கம் தொலைப்பாய்

நண்பனிடம் சண்டையிடுவாய்
அடித்தாலும் சிரித்து நிற்பாய்
அவளின் ஒற்றை பார்வைக்கு
நாள் கணக்கில் தவம் இருப்பாய்

இதுவும் கடந்து போகும் வாழ்க்கையில்
இதுவே வாழ்க்கையாகும் காதலில்!  

Previous
Next Post »