இரக்கம் இல்லாத இதயங்கள்
பற்று இல்லாத பாசங்கள்
நேற்றோடு தொலைந்து விட்ட மனிதம்
நெஞ்சோடு கலந்துவிட்ட வைராக்கியம்
வற்றிய குளத்தில்
மீன்களைப் போல
சகதியில் சிக்கிய
கால்களைப் போல
சாவதும், தவிப்பதும்
உறவினில் ஏனோ...
புழுதி படிந்த எண்ணங்களில்
அன்பு தென்றல் வீச கூடாதா?
புரிந்து கொள்ள துடிக்கின்றேன்
சிறு புன்னகைத்தால் ஆகாதா?
அத்தை என்று மாமன் என்று
ஆயிரம் உண்டு அகிலத்தில்
பத்திரம் என்று பாத்திரம் கண்டு
பாசப் பிச்சை விழும் இன்று
சித்தப்பனும் பெரியப்பனும்
சிலருக்கு தான் நல்லப்பன்
என்னைப் போன்ற பலருக்கு
அவர்களும் இங்கு வீரப்பன்
அடிபட்டு அவஸ்தைப்பட்டு
வான் உயர்ந்த பின்னாளில்
வா மகராசா என்று அவர்கள்
வாய் மலரும் நஞ்சாக...
நல்லதும் உண்டு உறவுகளில்
நான் கண்டதில்லை
இது நாள் வரையில்
கிடைக்கப் பெற்றவர்கள்
பாக்கியவான்கள்
ஏங்கித் தவிப்பவர்கள்
................வான்கள்?
பற்று இல்லாத பாசங்கள்
நேற்றோடு தொலைந்து விட்ட மனிதம்
நெஞ்சோடு கலந்துவிட்ட வைராக்கியம்
வற்றிய குளத்தில்
மீன்களைப் போல
சகதியில் சிக்கிய
கால்களைப் போல
சாவதும், தவிப்பதும்
உறவினில் ஏனோ...
புழுதி படிந்த எண்ணங்களில்
அன்பு தென்றல் வீச கூடாதா?
புரிந்து கொள்ள துடிக்கின்றேன்
சிறு புன்னகைத்தால் ஆகாதா?
அத்தை என்று மாமன் என்று
ஆயிரம் உண்டு அகிலத்தில்
பத்திரம் என்று பாத்திரம் கண்டு
பாசப் பிச்சை விழும் இன்று
சித்தப்பனும் பெரியப்பனும்
சிலருக்கு தான் நல்லப்பன்
என்னைப் போன்ற பலருக்கு
அவர்களும் இங்கு வீரப்பன்
அடிபட்டு அவஸ்தைப்பட்டு
வான் உயர்ந்த பின்னாளில்
வா மகராசா என்று அவர்கள்
வாய் மலரும் நஞ்சாக...
நல்லதும் உண்டு உறவுகளில்
நான் கண்டதில்லை
இது நாள் வரையில்
கிடைக்கப் பெற்றவர்கள்
பாக்கியவான்கள்
ஏங்கித் தவிப்பவர்கள்
................வான்கள்?

EmoticonEmoticon