கரிசல்காடு

கரிசல் காட்டில்
பிறந்த உனக்கு
காதல் வந்த தருணம் எதுவோ?

அழகான மழை காலத்தில்
பாலைவனம் உந்தன் இதயத்தில்

காதலிக்க மறுத்த பெண்ணை
கழுத்தறுக்க நினைக்கும் உள்ளம்

விலகி நின்று புன்னகைத்தால்
விளையும் ஒரு சமுதாயம்

விஷம் கொண்டு சீறி நின்றால்
கிடைத்து விடுமா அவளின் காதல்

ஏற்பதும் மறுப்பதும்
அவளின் முடிவு
உயிரை பறிக்க நினைப்பதா
ஆணின் முடிவு

மகிழ்ச்சியுடன் விட்டு நகரு
அவள் மனம் நினைத்து
இருக்கும் ஆயுள் முழுதும்

கரிசல் காட்டில் மழைத் துளியாய்
காதல் வளரும் படிப்படியாய்...

Previous
Next Post »