வெற்றி முத்தாய் மீண்டு வா...


கலங்காத மனதுக்கு
கவலை கடுகளவே...

உறவுகளோடும்
உணர்வுகளோடும்
மோதிப் பார்...

வாழ்க்கை என்னவென்று
உனக்குப் புரியும்...

மனம் துவண்டு 
வாடும் போதெல்லாம்
உன்னுள் உரைந்து
உன்னை கண்டுபிடி...

தோல்விகள் எல்லாம்
நிரந்தரம் அல்ல...
வெற்றிகள் எல்லாம்
ஒருவனுக்கே அல்ல..

முயன்றவன் தோற்றாலும்
முயற்சிகள் தோற்காது...

முழுநிலவே என்றாலும்
முழுவதும் தெரியாது...

உனக்குள் ஒளிந்திருக்கும்
திறமை உலகம் அறியாது...

தோல்வி கடலில்
நீந்தி வா...
வெற்றி முத்தாய்
மீண்டு வா...


Previous
Next Post »