காலத்தின் கைகளில்
நான் வெள்ளைக் காகிதம்
அதில் கவிதைகள் ஆவதும்
கரிக்கு இரையாவதும்
என் கையில் இல்லை...
மிக நீண்ட
இருள் சாலையில்
பயணிக்கும் என் வாழ்க்கை
எங்கு தேடியும்
அகப்படவில்லை
நம்பிக்கை ஒளி...
முட்களை பறித்துவிட்டு
ரோஜாவை கிள்ளி எரிந்தேன்...
நன்மையை பட்டினி போட்டு
தீமைக்கு உணவு அளித்தேன்...
எதை நோக்கி பயணிக்கும்
என் வாழ்க்கை..
அந்த எமனும் அறியாத
புதிர் வாழ்க்கை...

EmoticonEmoticon