காத்திருந்து காதல் செய்

படிக்கின்ற வயதில்
பல யோசனை எதற்கு

படி தாண்ட துடிக்கும்
பருவமா உனக்கு

காலம் கனியும்
காத்திருந்து காதல் செய்

பொறுமைக்கு நிகர்
பரிசு வெற்றியே

பிள்ளைகள் குணம்
அறிந்திட்ட பெற்றோர் மனம்
அழுதிடும் தினம்

பெற்றோர் இட்ட
எச்சங்களே
உங்களின் மிச்சம்
மறவாதீர்

அவர்களின்
நம்பிக்கை அறுத்து
நீங்கள் நல் வாழ்க்கை
வாழ்ந்திடுவீரோ...

Latest
Previous
Next Post »