காத்திருக்கிறேன்...!

காலங்கள் கடக்கின்றன..
கடமைகள் கண் முன்னே...
என்ன செய்வதென்று
தெரியாத நாட்கள்...
வாழ்க்கை அது போக்கில் போக...

சிரிப்பினை விழுங்கி...
குறும்பினை தொலைத்து...
கோபத்தை சேர்த்துக் கொண்டு...
போகும் இடம் எதுவோ...

பேருந்து பயணம்
சாலை ரசிக்க முடியவில்லை...
இளையராஜா பாடல்
செவி கதவு ஏனோ திறக்கவில்லை...

சிந்தனை முழுவதும்
நாட்களை எண்ணும்
சிறைக் கைதியாய்...

வாழ்வில் வருடம் முழுவதும்
பங்குனி வெயில்
முட்களை வீசி
குளிர் காய சொல்கிறது தென்றல்...

வாழ்க்கை ஆடும்
விளையாட்டில் நான் ஒரு
பார்வையாளன் போல்
வேடிக்கை மட்டுமே
பார்த்துக்கொண்டு இருக்கிறேன்...

நாவலின் கடைசிப் பக்கத்தை
தொலைத்து விட்டேன்
அது கிடைக்கும் நாளை நோக்கி
காத்திருக்கிறேன்.....!

Previous
Next Post »

3 comments

Write comments